கங்கை அமரன் குற்றச்சாட்டு: வெங்கட் பிரபு விளக்கம்- SK சொன்ன அந்த வார்த்தை

சரியான நேரம் அமைந்து, ஒரு நல்ல திரைக்கதை எனக்குக் கிடைத்தால், SK-வுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற நான் மிகவும் விரும்புவேன்.
SK- வெங்கட் பிரபு
SK- வெங்கட் பிரபு
Published on: 

கங்கை அமரன் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சினிமாப்பட விழாவில் பேசும்போது, ஒரு நட்சத்திர நடிகர் (பெயர் குறிப்பிடாமல்) தன்னுடைய மகனான வெங்கட் பிரபுவின் நாட்களை (இயக்குவதற்கான ஒதுக்கப்பட்ட நாள்) வீணடித்துவிட்டார். இதனால் அவருடைய அடுத்த படம் தள்ளிக் கொண்டே போகிறது எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப்போவதாக ஏற்கனவே செய்தி வெளியானது. பின்னர், படத்தின் அடுத்தக்கட்ட நகர்வு முன்னேறாமல் இருநதது. இதனால் கங்கை அமரன், சிவகார்த்திகேயனை மறைமுகமாக விமர்சித்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

SK எனக்கு எப்போதும் ஒரு நெருங்கிய நண்பர் மற்றும் சகோதரர் போன்றவர். இது குறித்து பலவிதமான யூகங்களும் சர்ச்சைகளும் நிலவி வருகின்றன. ஒரு தந்தையாக, தனது சொந்த மகன் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படம் தாமதமாகும்போது ஏற்படும் விரக்தி இயல்பானதே. அவருக்கு ஒருவேளை முழு விவரங்களும் தெரிந்திருக்காது. அதற்காக நான் அவரைக் குறை சொல்ல முடியாது.

எனது பணி என்று வரும்போது நான் மிகவும் அமைதியான ஒரு நபர். அவரிடம் உட்பட யாரிடமும் எனது தொழில்முறை விஷயங்களை விரிவாக பேசுவதில்லை. பல்வேறு காரணங்களால் அந்த படம் தொடங்கப்படாமல் போனது. அவ்வளவுதான். இதில் எந்த மனக்கசப்பும் இல்லை. சரியான நேரம் அமைந்து, ஒரு நல்ல திரைக்கதை எனக்குக் கிடைத்தால், SK-வுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற நான் மிகவும் விரும்புவேன். எனவே, தயவுசெய்து இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். நான் எனது அடுத்தடுத்த பணிகளில் மும்முரமாக இருக்கிறேன். என் சகோதரர் சேயோனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு வெங்கட்பிரபு தனது விளக்கம் அளித்திருந்தார்.

சிவகார்த்திகேயன் ரிப்ளை

இந்த எக்ஸ் பக்க பதிவுக்கு சிவகார்த்திகேயன் ரிப்ளை செய்திருந்தார். அதில் "சார், நாம் ஒரு குடும்பம் போன்றவர்கள். இதற்கெல்லாம் நீங்கள் இவ்வளவு சீரியஸாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சார். உங்கள் அடுத்த ப்ராஜெக்ட்டுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

சார், இதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன், இப்போதும் சொல்கிறேன். நான் எப்போதும் VP-யின் ரசிகராகவே இருப்பேன். விரைவில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை 28 படத்தின் மூலம் வெங்கட்பிரபு இயக்குநராக அறிமுகம் ஆனார். அஜித்தை வைத்து மங்காத்தா படத்தையும். வெங்கட்பிரபு விஜயை வைத்து கோட் படத்தையும், சிம்புவை வைத்து மாநாடு படத்தையும், கார்த்தியை வைத்து பிரியாணி படத்தையும் இஙக்கியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com