வேம்பு படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பல விருதுகளை வென்றுள்ளது.வேம்பு திரைப்படம் வரும் 23ம் தேதி வெளியாகவுள்ளது.
வேம்பு படத்தின் டிரெய்லர் ரிலீஸ்
Published on

இயக்குநர் வி. ஜஸ்டின் பிரபு இயக்கத்தில், 'மெட்ராஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகிய ஹரி கிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வேம்பு. இதில், கதாநாயகியாக ஷீலா நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஏ. குமரன் செய்துள்ளார். மணிகண்டன் முரளி இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான இப்படம் அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பல விருதுகளை வென்றுள்ளது.

வேம்பு திரைப்படம் வரும் 23ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.

வேம்பு படத்தின் டிரெய்லரை இயக்குனர் மாரிசெல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com