வீர தீர சூரன்' : மதுரை கிராம பகுதி ஷுட்டிங்கில் விக்ரம்

இதன் படப்பிடிப்பு மதுரை கிராம பகுதியில் நடந்து வருவதால் படப்பிடிப்பை பார்க்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.கிராமத்துக் கதையில் உருவாகி வரும் 'வீர தீர சூரன்' படத்துக்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வீர தீர சூரன்' : மதுரை கிராம பகுதி ஷுட்டிங்கில் விக்ரம்
Published on

சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடக்கிறது.தற்போது மதுரையை அடுத்த மேலூர் கல்லம்பட்டி கிராமத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு 10 நாட்களுக்கு இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இப்படம் ஒரு அதிரடி திரைப்படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு மதுரை கிராம பகுதியில் நடந்து வருவதால் படப்பிடிப்பை பார்க்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கிராமத்துக் கதையில் உருவாகி வரும் 'வீர தீர சூரன்' படத்துக்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com