'வீர தீர சூரன்' : 3 வேடத்தில் விக்ரம்

இதில் விக்ரம் நீண்ட 'தாடி' கெட்டப்பில் காட்சியளிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
'வீர தீர சூரன்' : 3 வேடத்தில் விக்ரம்
Published on

சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

கடந்த வாரம் இப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த டீசரில் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்.

இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார். இப்படம் ஒரு அதிரடி திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் விக்ரம் நீண்ட 'தாடி' கெட்டப்பில் காட்சியளிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் விக்ரம் 3 வேடத்தில் நடிக்கிறார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com