'வீர தீர சூரன்' : 'கேங்ஸ்டர்' வேடத்தில் விக்ரம்

'பிளாஷ்பேக்' ல் ஒரு கெட்டப்பிலும், கரண்டில் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் தோன்றுகிறார்.'பிளாஷ்பேக்' -ல் விக்ரம் 'செம மாஸான' ஒரு ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
'வீர தீர சூரன்' : 'கேங்ஸ்டர்' வேடத்தில் விக்ரம்
Published on

பிரபல நடிகர் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ,பார்வதி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பசுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து உள்ளார்.

தங்கலான் படத்தில் 'கங்கம்மா' எனும் வேடத்தில் பார்வதி நடித்துள்ளார். 'தங்கலான்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது

நடிகை பார்வதி கடந்த சில நாட்களுக்கு முன் தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு 'தங்கலான்' படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தது. மேலும் 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசு' அளித்தது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் நேற்று தனது 58- வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்த தினத்தை கவுரவிக்கும் வகையில் 'தங்கலான்' படத்தின் சிறப்பு 'டீசர்' இணையதளத்தில் தயாரிப்பு குழு வெளியிட்டது.

இந்த 'டீசர்' இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் விக்ரம் நடித்த அதிரடி சண்டை காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரசிகர்கள் விக்ரமை பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து 'சித்தா' படம் புகழ் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் சியான்-62 புதிய படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார்.

இப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் 'டைட்டில்' விக்ரம் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது. இந்த புதிய படத்துக்கு 'வீர தீர சூரன்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு டீஸரும் வெளியிடப்பட்டது. அவர் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்க உள்ளார். ' வீர தீர சூரன் ' ஒரு அதிரடி திரைப்படமாக விரைவில் உருவாக உள்ளது.

இப்படத்தில் விக்ரம் நீண்ட 'தாடி' கெட்டப்பில் காட்சியளிக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இதுதவிர மேலும் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் நடிக்க உள்ளார். இப்படத்தில் விக்ரம் 2 வேடங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

'பிளாஷ்பேக்' ல் ஒரு கெட்டப்பிலும், கரண்டில் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் தோன்றுகிறார். 'பிளாஷ்பேக்' போர்ஷனில் விக்ரம் 'செம மாஸான' ஒரு ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com