வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 - வெளியான புது தகவல்

தமிழ் திரையுலகில் லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் கவின்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் பிளடி பகர் படத்திலும், அருண் இயக்கும் ஊர் குருவி படத்திலும் நடிக்க இருக்கிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 - வெளியான புது தகவல்
Published on

தமிழ் திரையுலகில் லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் கவின். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ள நடிகர் கவின் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அந்த வரிசையில், ஸ்டார் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் பிளடி பகர் படத்திலும், அருண் இயக்கும் ஊர் குருவி படத்திலும் நடிக்க இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஆண்டிரியா இப்படத்தில் கேங்ஸ்டராக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம். சிவகார்த்திகேயன் திரைவாழ்வில் மிக முக்கியமான திரைப்படமாக இது அமைந்தது.

அதைதொடர்ந்து பொன்ராமின் இயக்கத்தில் சீமராஜா, ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்தார். தற்பொழுது பொன்ராம் கவினை வைத்து அடுத்து படம் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கவினிடம் கிராமத்து பின்னணி கதைக்களத்துடன் ஒரு கதையை கூறியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என கேள்வி எழுந்துள்ளது இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com