நள்ளிரவு 12.12 மணிக்கு வெளியாகும் 'சூர்யா 44' படத்தின் அப்டேட்

இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.
surya 44
Published on

நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது.

நாளை நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், 'சூர்யா 44' படத்தின் அப்டேட் இன்று நள்ளிரவு 12.12 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com