கங்குவா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கங்குவா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
Published on

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கங்குவா படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கங்குவா திரைப்படம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடக்கூடிய யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இதனை படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்

X

Maalai Malar
www.maalaimalar.com