

புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், புகைப்படம் வெளியிட்ட மாளவிகா ரகுநாத்தை விமர்சித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்தது.
நடிகை திரிஷா சமீபத்தில் தனது நண்பர்களுடன் லண்டனில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார். அவரை மாளவிகா ரகுநாத் என்பவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், புகைப்படம் வெளியிட்ட மாளவிகா ரகுநாத்தை விமர்சித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்தது.
பயனர்கள் கூறுகையில், ஒரு பிரபலம் தனது நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரத்தை செலவிடும்போது, அவர்களின் அனுமதி இல்லாமல் வீடியோ எடுப்பது அவர்களின் தனியுரிமையில் தலையிடும் செயலாகும் என விமர்சித்தனர்.
மேலும், பிரபலங்களுக்கும் தனிப்பட்ட சுதந்திரம் உண்டு என்றும், அடிப்படை நாகரிகம் இன்றி இப்படிப் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த ரகுநாத், “ஒரு பொதுவான இடத்தில் திரிஷா உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அவரது தனியுரிமையில் தலையிடாமல் தூரத்திலிருந்தே புகைப்படம் எடுத்தேன்” என பதிலளித்திருந்தார்.