

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட், சம்பத் ராஜ், ராஜு சுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளப் படம் சிக்மா.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.கே.தமிழ்க்குமரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
ஆக்சன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல், இரண்டாவது பாடலான அய்யய்யோ அம்மாடி ஏற்கனவே வெளியாகி இருந்தது.
‘சிக்மா’ படத்தில் ஒரு சிறப்பு பாடலில் ஜேசன் சஞ்சய், கேத்தரின் தெரசா நடனமாடி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
படம் முன்னதாக ஜூலை.31ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படித்துள்ளார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.