நாளை வெளியாகிறது 'ரெட்ட தல' டீசர்

இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார்.
நாளை வெளியாகிறது 'ரெட்ட தல' டீசர்
Published on

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார். இப்பாடல் ஒரு மெலடி பாடலாக உருவாகியுள்ளது. சமீபத்தில் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்தார். மேலும் தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லி கடை திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனமான டி சீரிஸ் பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டீசர் நாளைவெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com