முதலமைச்சர் விஜய் பிறந்த நாள்: கவிஞர் வைரமுத்து வாழ்த்து

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து பதிவு.
TN CM Vijay- Vairamuthu
Published on: 

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

இன்று

தமிழ்நாட்டின் முதலமைச்சர்

ஜோசப் விஜய் அவர்களின்

பிறந்தநாள்

என் பாடலைக் கலைசெய்த

என் தமிழுக்கு நியாயம்செய்த

ஒரு கலைஞன்

தமிழ்நாட்டு முதலமைச்சராய்ப்

பிறந்தநாள் காண்பது

பெருமை தருகிறது

குன்றாத உடல்நலத்தோடும்

குன்றுபோல் மனவளத்தோடும்

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com