

ஜெயிலர் 2 டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதன் இரண்டாம் பாகம் ‘ஜெயிலர் 2’ உருவாகி உள்ளது.
எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சூரஜ் வெஞ்சரமுடு, மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, முதல் பாகத்தில் அசத்திய மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் இம்முறை மீண்டும் தோன்றவுள்ளனர்.
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள படத்திற்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வெளியீடு தேதி நெருங்கி வரும்நிலையில், படக்குழு அடுத்தடுத்த டீசர், பாடல்கள் என அட்டேட்டே கொடுத்து வருகிறது. ஏற்கனவே படத்தின் 4 பாடல்கள் வெளியாகின.
குறிப்பாக 'ஹுகும் ரீலோடட்' தீம் பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி, படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை பெருமளவில் அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தின் பல ரசிகர்களால் உருவாக்கப்பட்ட மற்றும் கான்செப்ட் டிரெய்லர்கள் யூடியூபில் ஏற்கனவே பரவி வரும் நிலையில், அதிகாரப்பூர்வ டிரெய்லர் அக்டோபர் 5 (திங்கள்கிழமை) அன்று வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.