'தக் லைப்' படம் : விலகிய ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி தனது பிஸியான ஷெட்யூல் மற்றும் தேதி சிக்கல்கள் காரணமாக 'தக் லைப்' படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறதுதற்போது ஜெயம் ரவி ஆகியோர் இப்படத்தில் இருந்து விலகிய சம்பவம் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
'தக் லைப்' படம் : விலகிய ஜெயம் ரவி
Published on

பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, ஜெயம் ரவி, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரிக்கின்றன.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கமல் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதையொட்டி கமல் இல்லாத காட்சிகளை படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.இப்படத்தில் நடிகர் கமல் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில், செர்பியாவில் 'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன் மணிரத்னம் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வௌியாகி வைரலாகின.

இந்தபடத்தில் நடிகர்கமல் தற்காப்பு கலைதிறன்களை வெளிப்படுத்துகிறார்,பழங்கால வரலாற்று ஆயுதங்களுடன் எதிரிகளுடன் மோதும் பயங்கர சண்டை காட்சிகள் அதிர்வு ஏற்படுத்தும் வகையில் அமைய உள்ளன.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து கடந்த மாதம் விலகினார். அதை தொடர்ந்துதற்போது, நடிகர் ஜெயம் ரவியும் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன .

நடிகர் ஜெயம் ரவி தனது பிஸியான ஷெட்யூல் மற்றும் தேதி சிக்கல்கள் காரணமாக 'தக் லைப்' படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.ஏற்கனவே துல்கர், தற்போது ஜெயம் ரவி ஆகியோர் இப்படத்தில் இருந்து விலகிய சம்பவம் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com