தருணம் திரைப்படத்தின் `காற்றை கேட்டேன்' வீடியோ பாடல் வெளியானது

ஸென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்துள்ள திரைப்படம் 'தருணம்'.தருணம் படத்தில் கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.
தருணம் திரைப்படத்தின் `காற்றை கேட்டேன்' வீடியோ பாடல் வெளியானது
Published on

ஸென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்துள்ள திரைப்படம் 'தருணம்'.

'தேஜாவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள தருணம் படத்தில் கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவாளராகவும், அருள் சித்தார்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படத்திற்க்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர். திரைப்படம் பொங்கலை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் பாடலான காற்றை கேட்டேன் பாடலின் வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை மதன் கார்கி வரிகளில் கார்த்திக் பாடலை பாடியுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com