விவாகரத்தை அறிவித்த நட்சத்திர ஜோடி.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

நட்சத்திர ஜோடியான இவர்கள் பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில் அவர்கள் விவாகரத்து தாக்கல் செய்துள்ளனர்.கன்னட பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக பங்கேற்ற சந்தன் செட்டிக்கும் நிவேதிதாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
விவாகரத்தை அறிவித்த நட்சத்திர ஜோடி.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்
Published on

கன்னட பிக் பாஸ் டைட்டில் வின்னரும் நடிகருமான சந்தன் செட்டியும் அவரது மனைவி நிவேதிதா கௌடாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்துள்ளனர். கன்னட பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக பங்கேற்ற சந்தன் செட்டிக்கும் நிவேதிதாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சாந்தன் செட்டி நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்ற பன்முகத்தன்மையோடு கன்னட சினிமாவில் இயங்கி வருபவர்.

இந்நிலையில் நட்சத்திர ஜோடியான இவர்கள் பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில் அவர்கள் விவாகரத்து தாக்கல் செய்துள்ளனர். இந்த செய்தியை நிவேதிதா தனது இன்ஸ்டாகிராம் பக்க்கத்தில் அறிவித்துள்ளார். அவரது பதிவில், இந்த நாள், நானும் சந்தன் செட்டியும் நல்ல புரிதலோடு ஒருமனதாக எங்களது திருமணத்தை சட்டரீதியாக முறித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளோம்.

ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எங்களது முடிவுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு திசைகளில் சென்றாலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அக்கறையோடுதான் இருப்போம். உங்களின் ஆதரவு எங்களை இந்த இக்கட்டான காலகட்டத்தை கடக்க உதவி செய்யும். நன்றி என்று தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது. தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நாக சைதன்யா - சமந்தா,   ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி என இந்த பாட்டியல் நீளும். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com