#ARRPD6 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டு இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.அதைத் தொடர்ந்து பிரபுதேவா இன்னும் தலைப்பிடப்படாத ARRPD6 என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
#ARRPD6 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது
Published on

இந்தியன் மைக்கில் ஜேக்சன் என்று அழைக்கப்படும் பிரபு தேவா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிணாமத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

காதலன், லவ் பர்ட்ஸ், மின்சார கனவு , காதலா காதலா போன்ற பல ஹிட்டான படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு தெலுங்கு திரைத்துறையில் பல திரைப்படங்களை இயக்கினார். அதைத்தொடர்ந்து பல பாலிவுட் திரைப்படங்களை இயக்கி பாலிவுட்டில் முக்கிய இயக்குனரானார்.

தற்பொழுது மீண்டும் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டு இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதைத் தொடர்ந்து பிரபுதேவா இன்னும் தலைப்பிடப்படாத ARRPD6 என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான மனோஜ் என்.எஸ் இயக்குவுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை பிஹைண்ட்வுட்ஸ் தயாரிக்கவுள்ளது. பிரபுதேவா நடிக்கும் படத்திற்கு 6 வது முறை ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரபுதேவாவுடன், யோகி பாபு, அஜு வர்கீஸ், மொட்டை ராஜேந்திரன், ரெண்டின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. அதனை ஏ.ஆர் ரகுமான் அவரது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். அப்போஸ்டரில் ஏ.ஆர் ரகுமானும் பிரபு தேவாவும் கருப்பி நிற கோட் சூட்டில் காட்சி அளிக்கின்றனர். லாஃப், சிங் & டான்ஸ் அலாங் என்ற வாக்கியம் இடம் பெற்றுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com