‘சீன்’ படத்தின் 2வது பாடல் நாளை வெளியாகிறது!

படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.6ம் தேதி வெளியாகிறது.
‘சீன்’ படத்தின் 2வது பாடல் நாளை வெளியாகிறது!
Published on: 

ஜித்து மாதவன் எழுத்து மற்றும் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா நசீம், நஸ்லன், லுங்கி பாய்ஸ் ராஜ் பிரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளப் படம் 'சீன்'.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். படம் நவம்பர் 6ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தின் முதல் பாடலான ஆத்தி இவ யார்ரா சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலை ‘லுங்கி பாய்ஸ்’ புகழ் ராஜ்பிரியன் எழுதிப் பாடியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஏரோப்ளேன்’ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com