ராஜ்பிரியன் வரிகளில் வெளியானது ‘சீன்’ படத்தின் 2வது பாடல்!

கானா பாலா பாடலை பாடியுள்ளார்.
ராஜ்பிரியன் வரிகளில் வெளியானது ‘சீன்’ படத்தின் 2வது பாடல்!
Published on: 

ஜித்து மாதவன் எழுத்து மற்றும் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா நசீம் நடித்துள்ள ‘சீன்’ படத்தின் இரண்டாவது பாடலான ஏரோபிளேன் வெளியானது.

கானா பாலா பாடியுள்ள இப்பாடலையும் லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியனே எழுதியுள்ளார். முதல் பாடலான ‘ஆத்தி இவ யார்ரா’ பாடலை ராஜ்பிரியனே எழுதிப் பாடியிருந்தார்.

பாடலாசிரியர் என்பதைத் தாண்டி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் ராஜ்பிரியன் நடித்துள்ளார். நஸ்லனும் நடித்துள்ளார்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் நவம்பர் 6ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com