‘ஓம்’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியீடு!

படம் திரையரங்குகளில் நவ.20ம் தேதி வெளியாக உள்ளது.
‘ஓம்’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியீடு!
Published on: 

ராஜ்குமார் பெரியசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள படம் ‘ஓம்’. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மம்முட்டி, சாய் பல்லவி , ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் மற்றும் நசீருதீன் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சாய் அபியங்கர் படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரின் இசையில் வெளியான 'அலாக்கா லோவா' என்ற முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான வீழா வீரா நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ரிலீஸ் தேதி மாற்றம்:

முன்னதாக, இத்திரைப்படம் அக்டோபர் 16 அன்று வெளியாக இருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்துடனான மோதலைத் தவிர்க்கவும், தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் 'சீன்' படத்திற்கு வழிவிடவும், தனுஷ் தனது 'ஓம்' படத்தின் ரிலீஸை தள்ளிவைப்பதாக அறிவித்தார். தொடர்ந்து படம் நவ.20ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com