‘அப்பா குட்டி’ படத்தின் 2வது பாடல் வெளியானது!

திரையரங்குகளில் நவ.6ம் தேதி படம் வெளியாகிறது.
‘அப்பா குட்டி’ படத்தின் 2வது பாடல் வெளியானது!
Published on: 

மு.மாறன் எழுத்து, இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ரானி, குழந்தை நட்சத்திரம் லிதன்யா சிவபாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் அப்பா குட்டி.

மேலும் பகவதி பெருமாள், முத்துக்குமார், ஜென்சன் திவாகர், அருவி மதன், ஸ்ரீஜா ரவி, சித்ரா லட்சுமணன், முருகானந்தம், மூணார் ரமேஷ், பிரவீணா, ஹரிப்ரியா இசை, குமார் நடராஜன், லிசி ஆண்டனி, விஜயன், ஹரிப்ரியா, ஹரிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்துள்ளார். சூர்யாவின் சீன் படத்துடன் மோதும் இப்படம், நவ.6ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடல் கடந்த மாதம் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஏன் இந்த பெண்ணுக்கு’ வெளியாகி உள்ளது. அருண் பாரதியின் வரிகளுக்கு ருக்சர் பந்துகியா குரல் கொடுத்துள்ளார்.

X