தங்கலான் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ஆரம்பம்

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்.தங்கலான் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தங்கலான் படத்தின் ப்ரோமோஷன் பணிகள்  ஆரம்பம்
Published on

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.

திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரும் படத்தின் முதல் பாடலான மேனா மினிக்கி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் படக்குழுவினர். இதையொட்டி படத்தின் முக்கிய பிரபலங்களான விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பா. ரஞ்சித், ஜி.வி பிரகாஷ் மற்றும் ஞானவேல்ராஜா இணைந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை ஜி.வி பிரகாஷ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com