'தி லேடி கில்லர்' - செலவு கோடிகளில், கலெக்ஷன் - ஆயிரங்களில்... நம்மள முடிச்சு விட்டீங்க போங்க!

அஜய் பால் இயக்கத்தில் வெளியானது தி லேடி கில்லர் திரைப்படம்.இப்படத்தின் பொருட் செலவு 45 கோடி ரூபாய் ஆகும்.
'தி லேடி கில்லர்' - செலவு கோடிகளில், கலெக்ஷன் - ஆயிரங்களில்... நம்மள முடிச்சு விட்டீங்க போங்க!
Published on

 2023 ஆம் ஆண்டு அர்ஜூன் கபூர் மற்றும் பூமி பெத்நேகர் இணைந்து நடித்து அஜய் பால் இயக்கத்தில் வெளியானது தி லேடி கில்லர் திரைப்படமாகும். இப்படத்தின் பொருட் செலவு 45 கோடி ரூபாய் ஆகும்.

ஒரு ப்ளே பாய்க்கும் ஒரு ஆபத்தான மர்மமான பெண்ணுக்கும் காதல் ஏற்படுகிறது இதனால் என்ன விளைவுகள் ஆகிறது என்பதே படத்தின் கதைக்களமாகும். இப்படம் வெளியான போது முதல் நாள் வசூல் வெறும் 38 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆகும். இந்தி திரையுலகில் பல ஃபலாப் ஆன திரைப்படங்கள் வெளிவருவதுண்டு ஆனால் இப்படம் அளவுக்கு எந்த திரைப்படமும் தோல்வியடையவில்லை.

திரைப்படம் இதுவரை மொத்தம் 66 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இவ்வளவு படு தோல்வி அடைந்ததால் இப்படத்தை எந்த ஓடிடி நிறுவனமும் வாங்க முன்வரவில்லை. இதனால் இப்படத்தை தற்பொழுது யூடியூப் தளத்தில் இலவசமாக பார்க்கும்படி படக்குழு வெளியிட்டுள்ளது. யூடியூபில் இதுவரை 26 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

99.99% தோல்வியடைந்தது இப்படமே என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com