

கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்தின் முதல் பாடலான ‘மயில்வீரா’ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில், அதன் இரண்டாம் பாகம் ‘சர்தார் 2’ உருவாகி உள்ளது. இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் பி.எஸ்.மித்ரனே இயக்கியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன், வி.டி.வி கணேஷ் ஆகியோ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் படத்தை தயாரித்துள்ளன.
சாம் சி.எஸ். படத்திற்கு இசையமைத்துள்ளார். இது சாம் சி.எஸ். இசையமைக்கும் 100வது படம் எனக்கூறப்படுகிறது. படம் செப்.10ம் தேதி வெளியாக உள்ளது.