பன் பட்டர் ஜாம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
பன் பட்டர் ஜாம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
Published on

இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் படக்குழு வெளியிட்டது. இளம் தலைமுறையின் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு திரைப்படமாகும். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலின் வரிகளை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார். இதன் மூலம் விஜய் சேதுபதி பாடலாசிரியர் அறிமுகமாகவுள்ளார். இப்பாடலை சித்தார்த் மற்றும் ஷில்பா ராவ் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com