TR Vibe-ல் வெளியாகும் ஆரோமலே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்

'முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார்.
TR Vibe-ல் வெளியாகும் ஆரோமலே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்
Published on

'முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படமும், இப்படத்தில் வரும் முதல்  நீ முடிவும் நீ பாடலும் இவரை பிரபலமாக்கியது.

இப்படத்தை தொடர்ந்து கிஷன் தாஸ், சிங்க், தருணம் ஆகிய படங்களில் நடித்தார்.

இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார் ஹர்ஷத் கான்.

இந்நிலையில் கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து `ஆரோமலே' படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தை சாரங் தியாகு இயக்க. சித்து குமார் இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் டைட்டில் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. தற்பொழுது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான டண்டனக்கா லைஃபு என்ற பாடலை இன்று மாலை 5 மணிக்கு படக்குழு வெளியிட இருக்கிறது. இப்பாடலை விஷ்ணு எடாவன் வரிகளில் டி.ஆர் ராஜேந்தர் பாடியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com