ராணுவ முகாம் பகுதியில் 'தளபதி 69' படப்பிடிப்பு

படப்பிடிப்பிற்கு வந்த விஜயை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன் ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தாரை விஜய் சந்தித்து பேசியிருந்தார்.
ராணுவ முகாம் பகுதியில் 'தளபதி 69' படப்பிடிப்பு
Published on

எச்.வினோத் இயக்கத்தில் தற்போது விஜய் அவருடைய 69-வது படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தில் பாபி தியோல், மமிதா பைஜூ மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்தப் படம் விஜய்க்கு கடைசி படம் என்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது இப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பிற்கு வந்த விஜயை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், தளபதி 69 படப்பிடிப்பு சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ முகாம் பகுதியில் நடந்துவருகிறது. முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தாரை விஜய் சந்தித்து பேசியிருந்தார்.

இதனிடையே விஜய் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கட்சி சார்ந்த கூட்டங்களில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com