யாரும் எதிர்பாரா விதத்தில் வெடித்த அர்ஜூன் தாஸின் "BOMB"- டைட்டில் டீசர் ரிலீஸ்

BOMB படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.ஷிவாத்மிகா ராஜசேகர் அர்ஜூன் தாஸ்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
யாரும் எதிர்பாரா விதத்தில் வெடித்த அர்ஜூன் தாஸின் "BOMB"- டைட்டில் டீசர் ரிலீஸ்
Published on

சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பிரசன்னா செய்துள்ளார்.

இதையடுத்து, இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு நேற்று அறிவித்தது.

இந்நிலையில், பாம்ப் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com