சதீஷ் நடிக்கும் ‘பத்து நாள் ராஜா’ டீசர் வெளியீடு!

மொபைல் செயலிகளில் கடன் பெறுவதை மையமாக கொண்டு கதை உருவாகி உள்ளது.
சதீஷ் நடிக்கும் ‘பத்து நாள் ராஜா’ டீசர் வெளியீடு!
Published on: 

கூகுள் குட்டப்பா படத்தின் இயக்குநர் குரு சரவணனின் எழுத்து மற்றும் இயக்கத்தில், சதீஷ், தெலுங்கு நடிகர் ஆதி சாய்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘பத்து நாள் ராஜா’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

டீசரின்படி, மொபைல் செயலிகளில் கடன் பெறுவதை மையமாக கொண்டு கதை உருவாகி உள்ளது.

எஸ்ஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

படத்தில் ஆடுகளம் நரேஷ், சரவணன், கருடா ராம், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X