ஹீரோவாகும் பிரபல யூடியூபர்... "தமிழினி" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

இந்தப் படம் தென்மாவட்ட கடலோர பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
ஹீரோவாகும் பிரபல யூடியூபர்... "தமிழினி" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on: 

துபாயில் நடைபெற்ற சர்வதேச குறும்பட போட்டியில் முதல் பரிசு பெற்ற “பனையேறி” குறும்படத்தை தயாரித்த திசையன்விளையை சேர்ந்த D.P. சரவணன் மற்றும் இயக்குநர் கணேஷ் மூர்த்தி ஆகியோர், அந்த வெற்றியை தொடர்ந்து தற்போது “தமிழினி” என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகின்றனர்.

இந்த திரைப்படத்தில் “தலைவன் தலைவி” புகழ் தீபா சங்கர், திருப்பாச்சி பெஞ்சமின், சத்ரியன் படத்தில் நடித்த வின்சென்ட் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் சன் மியூசிக் தொகுப்பாளரும், பிரபல யூடியூபருமான VJ ஆசிக் ஒரு கதாநாயகனாகவும், “ராயல் சல்யூட்” படத்தில் நடித்த பிரதீப் ராஜ் மற்றொரு கதாநாயகனாகவும் நடிக்கின்றனர்.

கதாநாயகிகளாக “ரத்னம்”, “டீசல்” படத்தில் நடித்த ஷாஷா சிவகுமார் மற்றும் “அன்பெனும் ஆயுதம்” வெப்சீரிஸ் புகழ் புஷ்ப லதா நடித்துள்ளனர். மேலும் தயாரிப்பாளர் D.P. சரவணனும் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

“பனையேறி” குறும்படத்தின் மூலம் தென் மாவட்ட பனையேறும் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்த இந்த படக்குழு, “தமிழினி” திரைப்படத்தில் மீனவ மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக படமாக்கியுள்ளது. இப்படம் தென்மாவட்ட கடலோர பகுதிகளான முட்டம், உவரி, கடியப்பட்டிணம், குளச்சல், திசையன்விளை, கூட்டப்பனை, பெரிய தாழை, மணப்பாடு போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் கதை மற்றும் வசனத்தை இயக்குநர் கணேஷ் மூர்த்தி மற்றும் தேவா இணைந்து எழுதியுள்ளனர். கணேஷ் மூர்த்தி இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், “தமிழினி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com