முகம் முழுக்க சோகம்.. விஜயகாந்த் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த விஜய்

உடல்நலக் குறைவு காரணமாக விஜயகாந்த் உயிரிழந்தார்.இவரது உடல் அஞ்சலிக்காக தே.மு.தி.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
முகம் முழுக்க சோகம்.. விஜயகாந்த் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த விஜய்
Published on

தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை மோசமாக இருந்து வந்த நிலையில், நேற்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் வென்டிலேட்டர் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் உயிரிழந்தார். இவரது மறைவை அறிந்து பலர் சமூக வலைதளங்களிலும், நேரிலும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

காலை முதலே திரை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலதரப்பட்டோரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய் தே.மு.தி.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com