பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி - டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது

எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி - டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது
Published on

'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி 'நானும் ரவுடி' பட வெற்றிக்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்ற விக்னேஷ் சிவன், 'தானா சேர்ந்த கூட்டம்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இதையடுத்து, தற்போது எல் ஐ கே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி ஷெட்டி நடித்து உள்ளனர்.

எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை இன்று அதிகாலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com