லவ் இன்சூரன்ஸ் கம்பெனி - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Published on

'போடா போடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி 'நானும் ரவுடி' பட வெற்றிக்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்றவர் விக்னேஷ் சிவன். இதைத் தொடர்ந்து அவர் 'தானா சேர்ந்த கூட்டம்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களை இயக்கினார்.

இவர், தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி செட்டி நடித்து உள்ளனர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், படக்குழு சார்பில் டைட்டில் லுக் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து எல்ஐகே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com