அனிருத் Birthday ட்ரீட்: வெளியானது 'தீமா'.. LIK ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல்

படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.
அனிருத் Birthday ட்ரீட்: வெளியானது 'தீமா'.. LIK ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல்
Published on

விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து உள்ளனர். இப்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. தனது காதலை அடைவதற்காக எதிர்காலத்திற்கு டைம் டிராவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'தீமா' பாடல் அனிருத் பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது. மூச்சே விடாமல் அனிருத் ஒரு பெரிய சரணத்தை பாடியுள்ளார் என்பது தான் இந்த பாட்டின் சிறப்பாக உள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் எல்.ஐ.கே. பட தீமா பாடல் இளம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பலரும் இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com