ஆசியாவின் ஆஸ்கார் விருது மேடையில் மின்னிய தமிழ் இயக்குநர் - ‘சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்’ புதிய சாதனை!

குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் வன்முறையை மிகவும் நுணுக்கமாகவும், வேகத்துடனும், அதேசமயம் வெறுமைக்கும், ஆறுதலுக்கும் இடையே ஊசலாடும் உணர்வுகளையும் இப்படம் காட்டுகிறது.
ஆசியாவின் ஆஸ்கார் விருது மேடையில் மின்னிய தமிழ் இயக்குநர் - ‘சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்’ புதிய சாதனை!
Published on: 

‘சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்’ படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ஆர். கௌதம், 2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய பசிபிக் திரை விருதுகளில், சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

இதன்மூலம் இப்படம் மேலும் ஒரு சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் வெளியிடப்பட்டது. இதன்மூலம் பெர்லின் விழாவில் திரையிடப்பட்ட 4வது தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றது.

மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவின் தொடக்கத் திரைப்படமாக இத்திரைப்படம் திரையிடப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்றது. மெல்போர்ன் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான பரிந்துரைப் பட்டியல்களிலும் இடம்பிடித்தது .

இந்நிலையில் ஆசியாவின் ஆஸ்கர் எனப்படும் ஆசிய பசிபிக் திரை விருதைப் பெற்றுள்ளது.

சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்

“ஒரு இளைஞன் மரணமடைகிறான். ஈமச்சடங்குகள் நடக்கின்றன; ஆனால் துக்கம் அந்தளவுக்கு இல்லை. அந்த மரணம் பல விஷயங்களை உலுக்கி மாற்றுகிறது. குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் வன்முறையை மிகவும் நுணுக்கமாகவும், வேகத்துடனும், அதேசமயம் வெறுமைக்கும், ஆறுதலுக்கும் இடையே ஊசலாடும் உணர்வுகளையும் இப்படம் காட்டுகிறது.

என்ன ஒரு அற்புதமான அறிமுகத் திரைப்படம்!” என இப்படத்தை பெர்லினேல் தேர்வுக்குழு பாராட்டியிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com