ஜெயம் ரவியுடன் இணைந்த இளம் நடிகை

ஜெயம் ரவியின் 30வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கவுள்ளார்.
ஜெயம் ரவியுடன் இணைந்த இளம் நடிகை
Published on

அகிலன், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, இறைவன், ஜெஆர்30 மற்றும் சைரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து ஜெயம் ரவியின் 32 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜீனி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கவுள்ளார்.

கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கெபி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வேல்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com