ஆக்ஷனில் கலக்க தயாராகும் மனோஜ்குமார் மஞ்சு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

இயக்குனர் வருண் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வாட் தி ஃபிஷ்' .இப்படத்தில் மனோஜ்குமார் மஞ்சு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வாட் தி ஃபிஷ்
வாட் தி ஃபிஷ்
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனான மனோஜ்குமார் மஞ்சு ஆறு வருடங்களுக்குப் பிறகு அதிரடி ஆக்ஷனோடு களம் இறங்குகிறார். சிக்ஸ் ஐ எக்ஸ் சினிமாஸ் (6ix Cinemas) தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வருண் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'வாட் தி ஃபிஷ்' (WHAT THE FISH).

சமீபத்தில் வெளியான இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் இருக்கும் பல வகை சித்திரங்கள் நமக்குள் பெரும் ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு கனடா மற்றும் டொரோண்டோ நகரங்களில் 75 நாட்கள் நடக்கவுள்ளது.

படத்தில் உலகளாவிய முன்னணி நடிகர்களும் கலைஞர்களும் பங்குகொள்ளவுள்ளனர். அவர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படம் பல மொழிகளில் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com