என்ன ஷாக் ஆகி நிக்கிற.. விருமன் படத்தின் புதிய வீடியோ..

முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.விருமன் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விருமன்
விருமன்
Published on

கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விருமன்

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் 'விருமன்' படத்தின் ஸ்னீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் தனக்கு முதல் எதிரியான தன் அப்பா பிரகாஷ் ராஜை அடித்தவனுக்கு மேல தாளத்தோடு வந்து பிரகாஷ் ராஜ் முன்பே மோதிரம் போடுவது போல் வெளியாகியுள்ளது இந்த ஸ்னீக் பீக். ''விருமன்'' திரைப்படம் நாளை ( ஆகஸ்ட் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com