ஹிருத்திக் ரோஷனுக்கு நன்றி.. அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்..

விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார்கள்.இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சாம் சி. எஸ் - ஹிருத்திக் ரோஷன்
சாம் சி. எஸ் - ஹிருத்திக் ரோஷன்
Published on

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விக்ரம் வேதா

இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர்.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் பின்னணி இசை பணி முடிவடைந்துள்ளது. இதனை இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

சாம் சி. எஸ் - ஹிருத்திக் ரோஷன்

மேலும் அந்த பதிவில், "வாய்ப்பளித்ததற்கு புஷ்கர்-காயத்ரி மற்றும் ஹிருத்திக் ரோஷனுக்கு மிக்க நன்றி. உங்கள் அனைவருக்கும் இந்த திரைப்படமும் என் இசையும் பிடிக்கும் என்று நம்புகிறேன். திரைப்படத்தின் வெளியீட்டிற்கு ஆர்வமாக காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

'விக்ரம் வேதா' திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com