படக்குழுவினரை படம் பிடித்த விஜய்.. வைரலாகும் வீடியோ

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.படப்பிடிப்புக்காக தளபதி 67 படக்குழு காஷ்மீர் சென்றுள்ளனர்.
படக்குழுவினரை படம் பிடித்த விஜய்.. வைரலாகும் வீடியோ
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தளபதி 67 படக்குழு படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் காஷ்மீருக்கு சென்றதாக கூறப்பட்டது. இதனிடையே தொடர் அப்டேட்டுகளை கொடுத்து படக்குழு ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், காஷ்மீர் படபிடிப்புக்காக தனி விமானத்தில் சென்ற வீடியோவை பகிர்ந்து உறுதிபடுத்தியுள்ளனர். அப்போது விமானத்தில் இருந்த அனைவரையும் விஜய் சந்தித்து கையசைத்து வரவேற்றார். மேலும் படக்குழுவினரை வீடியோ எடுத்து மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com