நீங்கள் குத்தும் முத்திரைகள் ஏற்பதில்லை நான்- ட்ரெண்டாகும் ரத்தம் பட பாடல்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நீங்கள் குத்தும் முத்திரைகள் ஏற்பதில்லை நான்- ட்ரெண்டாகும் ரத்தம் பட பாடல்
Published on

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரத்தம்'.இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 'ரத்தம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு நாள்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்றத்தாழ்வு குறித்து உருவாகியுள்ள இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி, பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com