புதிய போஸ்டரை வெளியிட்ட விஜய் ஆண்டனி படக்குழு

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் வள்ளி மயில்.இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதை தொடர்ந்து படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி
Published on

வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என கவனிக்க வைத்த பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இதைத்தொடர்ந்து, இவர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'வள்ளி மயில்'. இப்படத்தில் பிரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தினை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். வள்ளி திருமணத்தை பின்புலமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

வள்ளி மயில்
வள்ளி மயில்

வள்ளி மயில்

இந்நிலையில் 'வள்ளி மயில்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகி பரியா அப்துல்லாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com