விஜய் ஆண்டனி படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர்

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் “ரத்தம்”.இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
விஜய் ஆண்டனி 
விஜய் ஆண்டனி 
Published on

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் தற்போது ரத்தம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தமிழ்ப்படம் என்ற படத்தை இயக்கி பிரபலமானார்.

இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்பினிடி பிலிம் வென்டர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா & எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

ரத்தம்
ரத்தம்

ரத்தம்

இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட்டை இயக்குனர் சி.எஸ்.அமுதன் அறிவித்துள்ளார். அதன்படி ரத்தம் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 24-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com