விஜய் ஆண்டனி கொடுத்த புதிய அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் வள்ளி மயில்.இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதை தொடர்ந்து அடுத்து படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி
Published on

வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என கவனிக்க வைத்த பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இதைத்தொடர்ந்து, இவர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'வள்ளி மயில்'. இப்படத்தில் பிரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கிறார்.

வள்ளிமயில்
வள்ளிமயில்

வள்ளிமயில்


டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். வள்ளி திருமணத்தை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com