முழு வீச்சில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பு

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’.இப்படத்தின் கலை இயக்குனர் மிலன் சமீபத்தில் காலமானார்.
முழு வீச்சில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பு
Published on: 

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் 'விடாமுயற்சி' கலை இயக்குனர் மிலன் மாரடைப்பினால் அஜர்பைஜான் நாட்டில் உயிரிழந்தார். இது திரைத்துறையில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது 'விடாமுயற்சி' படத்தின் கலை இயக்குனராக அவரது மனைவி மரியா மெர்லின் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com