இளையராஜாவுடன் முதன்முறையாக இணையும் வெங்கட் பிரபு

சென்னை-28, மங்காத்தா, மாநாடு போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியவர் வெங்கட் பிரபு.இவர் இயக்கும் அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இளையராஜா - வெங்கட் பிரபு
இளையராஜா - வெங்கட் பிரபு
Published on

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் 'மன்மத லீலை'. வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட் நடிகைகள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

என்சி22
என்சி22

என்சி22

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார்.

இளையராஜா - வெங்கட் பிரபு
இளையராஜா - வெங்கட் பிரபு

இளையராஜா - வெங்கட் பிரபு

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணி இப்படத்தின் மூலம் முதன்முறையாக இணையவுள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வெங்கட்பிரபு இதுவரை இயக்கிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி மட்டுமே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com