மீண்டும் வெளியாகும் ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்'

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வீரன்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மீண்டும் வெளியாகும் ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்'
Published on

இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் கடந்த 2-ம் தேதி வெளியான படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக வெளியான இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து குழந்தைகளுக்கு சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இதில், 300 குழந்தைகள் கலந்து கொண்டு படத்தை கண்டு ரசித்தனர்.

வீரன் போஸ்டர்

இந்நிலையில், 'வீரன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 30-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com