அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்ட விஷால்

புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹயாத்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் இரண்டாம் சிங்கிளின் அறிவிப்பு வெளியானது.
விஷால்
விஷால்
Published on

விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். 

நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக நிறைவடைந்து விட்டதாக நடிகர் விஷால் அறிவித்து இருக்கிறார். மேலும் இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருப்பதாகவும், விரைவில் அந்த பாடல் வெளியாகும் என்றும் விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com