வீர சிம்ஹா ரெட்டி: முதல் நாளில் இவ்வளவு வசூலா..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வீர சிம்ஹா ரெட்டி'.இப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வீர சிம்ஹா ரெட்டி
வீர சிம்ஹா ரெட்டி
Published on

இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வீர சிம்ஹா ரெட்டி

மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வீர சிம்ஹா ரெட்டி போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் முதல் நாளில் ரூ.54 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com