அலங்கார அல்லி நிலா ஆட போட்டு நின்னாளே.. வைரலாகும் 'ரஞ்சிதமே' வீடியோ பாடல்..

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் ‘வாரிசு’.இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரஞ்சிதமே’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
வாரிசு
வாரிசு
Published on

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வாரிசு

பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'வாரிசு' படத்தின் 'ரஞ்சிதமே', 'தீ தளபதி', 'சோல் ஆஃப் வாரிசு' போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று பார்வையாளர்களை குவித்து வருகிறது.

வாரிசு

இந்நிலையில் வாரிசு படத்தில் இடம்பெற்று பலரையும் கவர்ந்த 'ரஞ்சிதமே'வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் இடம்பெற்ற அலங்கார அல்லி நிலா ஆட போட்டு நின்னாளே.. போன்ற வரிகளை ரசிகர்கள் பலரும் பதிவிட்டு இந்த பாடலை வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com